சிலை கடத்தல்: டிஎஸ்பி காதர்பாஷா நீதிமன்றம் காவல் நீட்டிப்பு!

கும்பகோணம்:

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் டிஎஸ்பி காதர் பாட்ஷாவுக்கு அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சுமார் 9  கோடி ரூபாய் மதிப்பிலான 3 சிலைகளை தாய்லாந்து நாட்டுக்கு கடத்தப்பட்ட விவ காரத்தில், தேடப்பட்டு வந்த போலீஸ் டிஎஸ்பி காதர் பாஷா கடந்த 13ந்தேதி கைது செய்யப்பட் டார். சிறையில் அடைக்கப்பட்ட அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.அதையடுத்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது நீதி மன்ற காவல் அக்டோபர் 6ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2008 ம் ஆண்டு விருதுநகர் அருகே உள்ள  ஆலடிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தில் இருந்து 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை தனது சக போலீசார் உதவியுடன்  துப்பாக்கியை காட்டி மிரட்டி, விவசாயிடம் இருந்து கைப்பற்றிய டிஎஸ்பி காதர்பாஷா.  அந்த சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் 15 லட்ச ரூபாய்க்கு விற்றார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் பேரில் போலீஸ்  டிஎஸ்பி  காதர்பாஷாவை கைது செய்ய முயன்றனர். இதையடுத்து அவர் தலைமறைவானர். அதைத்தொடர்ந்து கடந்த 13ந்தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.