100 விழுக்காடு மக்கள் ஒத்துழைப்பு தந்தால், 100 விழுக்காடு மீண்டு வர முடியும்… அமைச்சர் உதயகுமார்

சென்னை:

பொதுமக்கள் 100 விழுக்காடு ஒத்துழைப்பு தந்தால், 100 விழுக்காடு கொரோனா தொற்றில்இருந்து  மீண்டு வர முடியும் என்று சென்னையில் கொரோனா பகுதிகளை பார்வையிட்ட  அமைச்சர் உதயகுமார் கூறனார்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க புதிதாக கட்டப்பட்ட நோய் கட்டுப்பாட்டு மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று  திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்  தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதால்  கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

திருவொற்றியூர் மண்டலத்தைப் பொறுத்தவரையில், பிற நோய் உள்ளவர்களை காப்பாற்றும் பணி மிகவும் சவாலாக உள்ளது. இருந்தபோதிலும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் 100 விழுக்காடு வெற்றி கிடைக்கும்.

பொதுமக்கள் ஒத்துழைத்ததால் சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களிலும் அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி மக்கள் மேலும் 100 விழுக்காடு ஒத்துழைத்தால் நோய்த் தொற்றிலிருந்து 100 விழுக்காடு மீண்டு வரமுடியும்”.

இவ்வாறு அவர் கூறினார்.