வாஷிங்டன்

மெரிக்காவில் அதிக அளவில் முகக் கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் என ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது.

உலக அளவில் கொரோனா தொற்று 80 லட்சத்தைத் தாண்டி உள்ளது.   இதில் 4.36 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.    இதில் அமெரிக்காவில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது  இது வரை 21.62 லட்சத்துக்கு மேற்பட்டோர் இங்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இது மொத்த அளவில் 25%க்கும் அதிகம் ஆகும்.  இதைப் போல் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1.17 லட்சத்தை தாண்டி உள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கவில்லை என்பதால் தனிமைப்படுத்தல், முன்னெச்சரிக்கை போன்ற நடவடிக்கைஅக்ல் அவசியமாகின்றது.  குறிப்பாக முகக் கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்றைப் பெருமளவில் தடுக்க முடியும்.   ஜப்பான் நாட்டில் முகக் கவசம் அணியும் பழக்கம் பெருவாரியாக உள்ளது.  அமெரிக்காவில் அது கிடையாது.

நேற்று முன் தினம் ஒரே நாளில் அமெரிக்காவில் 3000 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ளனர்.  இதே நாளில் ஜப்பான் நாட்டில் ஒருவர் மட்டுமே உயிர் இழந்துள்ளனர்.   அது மட்டுமின்றி அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20000க்கும் அதிகமாக இருந்த நேரத்தில் ஜப்பானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக இருந்துள்ளது.

ஜப்பானில் ஊரடங்கு அமல்படுத்தவில்லை   பல வர்த்தக மற்றும் தொழில் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகின்றன.   அதே வேளையில் ஜப்பானிய மக்கள் சமூக இடைவெளியை ஓரளவுக்கு மட்டுமே பின்பற்றி வருகின்றன.    அது மட்டுமின்றி ஒருவருக்கொருவர் நேரடி சந்திப்பு போன்றவற்றையும் அவர்கள் மிகவும் குறைத்துக் கொள்ளவில்லை.

இது குறித்து கணக்கெடுப்பு நடத்திய அமெரிக்க விஞ்ஞானியான டே காய், “இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டில் அனைவருமே முகக்கவசம் அணிவதாகும்.   முகக் கவசம் அணிவதன் மூலம் வைரஸ் தொற்றை வெகுவாகக் குறைக்க முடியும்.  இந்த வழக்கம் ஜப்பான் உள்ளிட்ட பல கிழக்காசிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஒலிவாங்கி பென்ஸ் உள்ளிட்டோர் பொது மக்கள் மற்றும் அதிகாரிகளை அதிக அளவில் சந்தித்து வருகின்றனர்   இதில் அதிபர் மற்றும் துணை அதிபர் உள்ளிட்டோர் எப்போதாவது முகக் கவசம் அணிகின்றனர்.  ஆனால்  பொதுமக்களில் பலருக்கு முகக் கவசம் அணியும் பழக்கம் இல்லை.  இவர்களில் 80% மக்களாவது முகக் கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும்.

அமெரிக்காவில்  பொதுமக்களில் பலரும் ஒரு சில அரசியல் பிரமுகர்களும் முகக் கவசம் அணிந்தால் தொற்று ஏற்படாது என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை எனக் கூறுகின்றனர்.   ஒரு சில ஆர்வலர்கள் ,முகக் கவசம் அணிவது தனிமனித சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது எனவும் கூறி வருகின்றனர்.    இதையொட்டி டிவிட்டரில் முகக் கவச ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே அறிக்கைப் போர் நிகழ்ந்து வருகிறது.

உலக சுகாதார மையப் பிரதிநிதிகள் ,முகக் கவசம் அணியாததால்  தொற்றுஅதிகரிப்பதாகக் கூறி உள்ளனர்.   அது மட்டுமின்றி முகக் கவசம் அணிந்திருந்தாலும் நெருங்கிய சந்திப்பு, பேச்சு வார்த்தைகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.