நியூயார்க்

ரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள உலக வர்த்தகக் கூட்டத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் உருவாகி வர்த்தகப் போர் முடிவுக்கு வரலாம் என பிரபல பத்திரிகையான வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக  இறக்குமதி வரிகளை உயர்த்தி வருகின்றன.  இதனால் இரு நாடுகளிலும் பொருளாதாரம், உற்பத்தி ஆகியவை பாதிப்பு அடைகின்றன.   அது மட்டுமின்றி இதனால் பல உலக நாடுகளின் வர்த்தகம் பாதிப்பு அடைகிறது.

இது குறித்து பிரபல பத்திரிகையான வால் ஸ்டிரீட் ஜர்னல், “தற்போதுள்ள நிலையில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து போவது நன்மையில் முடியும்.   ஆனால் இரு நாடுகளுமே மற்ற நாட்டுக்கு நன்மை அளிக்கும் எந்த யோசனையையும் ஏற்றுக் கொள்ளாமல் உள்ளன.   ஆகவே இரு நாடுகளுக்கிடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்.

வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள உலக வர்த்தகக் கூட்டத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையில் ஒரு ஒப்பந்தம் உருவானால் மட்டுமே இந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வரும்.  முக்கியமாக சீனா அமெரிக்காவில் உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும்.   அதைப் போல் அமெரிக்காவும் சீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளையும் பொருளாதார தடைகளையும் நீக்க வேண்டும்.

தற்போது சீனா ஹாஸ்டனில் உள்ள செனியர் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து இயற்கை எரிவாயு சுமார் 1800 கோடி டாலருக்கு வர்த்தகம் செய்ய உள்ளது.  இது அமெரிக்காவுக்கு ஒரு நல்ல வர்த்தகமாகும் அதை ஒட்டி அமெரிக்காவும் தனது நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டு சீன பொருட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என செய்தி வெளியிட்டுள்ளது.