ஒரு பெண் தலைமுடியை வெட்டுகிறாள் என்றால் தன் வாழ்க்கையை மாற்ற போகிறாள் என்று அர்த்தம்…..!

ஜீவாவின் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி.மேலும் பல தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.

அதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிக்கவில்லை.

இந்த நிலையில், அடிக்கடி தனது செல்ல பிராணியுடன் இருப்பதை போன்ற போட்டோக்களையும், போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர் அஞ்சலி.

தற்போது அஞ்சலி முடியை வெட்டி ஷார்ட் ஹேரில் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனுடன் ஒரு பெண் தலைமுடியை வெட்டுகிறாள் என்றால் தன் வாழ்க்கையை மாற்ற போகிறாள் என்று அர்த்தம் என்று பதிவிட்டுள்ளார்.