அதிமுக அழைத்தால், இணைய தயார்! டி.ஆர் அதிரடி
அதிமுக அழைத்தால், இணைய தயார்! டி.ஆர் அதிரடி

திருச்சி,
திமுக அழைத்தால், அக்கட்சியில் சேர்வது குறித்து முடிவு செய்வேன் என்கிறார் பிரபல இயக்குனரும், லட்சிய திமுக கட்சியின் நிர்வாகியுமான டி.ராஜேந்தர்.
இன்று காலை திருச்சி வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நடைபெற இருக்கும்  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றும், நான் தயாரிக்கும் எந்தவொரு படத்தையும் வெளியிடும் உரிமை எந்த தொலைக்காட்சிக்கும் கொடுத்ததில்லை என்றார். காரணம் அதன் வாயிலாக திருட்டு விசிடி வெளியாகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் திரையரங்குகளில் கட்டணம் அதிகமாக உள்ளது. சாமானிய மக்களும் திரையரங்கு வந்து படம் பார்க்கும் வகையில்  அதை குறைக்க போராடுவேன் என்றார்.
மேலும், வைகோவை நம்பி யாரும் செல்லக் கூடாது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்த வைகோ ஏன் தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கினார்? தற்போது ஏன் விலகினார் என்று கேள்வி எழுப்பினார்.
நான் ஜெயலலிதாவின் அபிமானி. ஏனென்றால், ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் கொண்டு வந்த தீர்மானம் என்னைக் கவர்ந்தது என்றார்.
மேலும், அதிமுகவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தால்,  அதிமுகவில் இணைவது  குறித்து முடிவு செய்வேன் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, காவிரி விவகாரத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இத்தனை வருடங்களாக  ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்காத பாஜக தற்போது குரல் எழுப்புவது ஏன்? என்றும் பாஜவுக்கு கேள்வி விடுத்தார். மேலும், தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும்  நாம் தற்போது பலவீனமாக இருக்கிறோம், இதை  பாஜக பயன்படுத்தி கொள்ளத் துடிக்கிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா தலைமை பிடிக்காமல் பலர் அதிமுகவில் இருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் வேளையில் டி.ஆரின் இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also read