பாரதிய ஜனதா ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த் ஒப்புதல்

--

சென்னை:

னைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுப்பதாக இருந்தால், அது ஆபத்தான கட்சி யாகத்தான் இருக்க வேண்டும் என்று ரஜினி காந்த் கூறி உள்ளார். ரஜினியின் இந்த கேள்வி பாஜகவிருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் நெருக்கம் கொண்டுள்ள நடிகர் ரஜினி காந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், அது ஆன்மீக அரசியல் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டை நெருங்கும் நிலையில, தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார். அதைத்தொடர்ந்து, அவ்வப்போது தனது ரசிகர்களை கூப்பிட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதும், அதைத்தொடர்ந்து புது படங்களில் நடிக்க வெளியிடங்களுக்கு செல்வதுமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில், ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ள நிலையில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அதைத்தொடர்ந்து, மக்கள் ஆதரவில்லாமல் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு பின்புலமாக பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, ஒன்றிணைத்து வருகிறார். கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில்,  செய்யிளர்களிடம் பேசிய, ரஜினிகாந்த், அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுப்பதாக இருந்தால், அது ஆபத்தான கட்சியாகத்தான்  இருக்க வேண்டும், இல்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ரஜினியின் இந்த கேள்வி பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ரஜினிக்கு ஆதரவாக பாஜக குரல் கொடுத்து வந்த நிலையில், இன்று ரஜினியின் பேச்சு… பாஜக மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.