அமமுக வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் சரி செய்யப்படும்…! டிடிவி தினகரன்

கள்ளக்குறிச்சி:

ள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் டிடிவி தினகரன், அமமுக எம்.பி.க்கள் வெற்றி பெற்றால் , ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வருவோம் என்று கூறி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமமு வேட்பாளர் கோமுகிமணியனை ஆதரித்து சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் டிடிவிதினகரன் பிரசாரம் செய்தார்.

அப்போது “எட்டு வழி சாலை திட்டத்தால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளதுள்ளனர் என்று கூறியவர், மீண்டும் ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால், மக்களை பாதிக்கும் திட்டங்களையே நிறைவேற்றுவார்கள்” , ஆகவே அமமுகவின் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

மேலும், பாராளுமன்ற,  சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றிம் என்றும் , வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்றவர், நாங்கள் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டியில் உள்ள சிக்கல்களை தீர்ப்போம் என்றும் கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேக்கிறவன் கேனையனா இருந்தால், கேழ்வரசில் நெய் வடியுமாம் என்ற பழமொழிக்கேற்ப டிடிவியின் பேச்சு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.