அதிமுக கொடியில் படம் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக கொடியில் அண்ணா படம் இல்லை என்றால் அண்ணா இருந்தார் என்ற அடையாளமே இருந்திருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டு விழா ஆளும் அ.தி.மு.க.வால் தற்போது தமிழகம் முழுதும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.

அப்போது அவர், “அதிமுக கொடியில் அண்ணா படம் இல்லை என்றால் அண்ணா இருந்தார் என்ற அடையாளமே இருந்திருக்காது” என்று பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி