னாஜி

கோவாவில் மாட்டுக்கறிக்கு தடை விதித்தால் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் நலம் பெறுவார் என இந்துத் துறவி சாமி சக்ரபாணி மகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோவா, டில்லி, மும்பை, நியூயார்க் உள்ளிட்ட பல இடங்களில் சிகிச்சை நடைபெற்றது. அவர் உடல்நிலை இன்னும் முழுமையாக சீரடையாமல் உள்ளது. தற்போது மூக்கில் ஒரு டியூபை பொருத்தியபடி ஓரிரு நிகழ்வுகளில் அவர் கலந்துக் கொண்டார்.

மிகவும் உடல்நலக் குறைவுடன் கோவா மாநில நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மனோகர் பாரிக்கர் அதன் பிறகு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை தொடர்கிறது அவரை பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அகியோர் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அகில இந்திய இந்து மகாசபை தலைவரான சாமி சக்ரபாணி மகராஜ் அவர் குணமடைய ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அவர், “கோவா மாநிலத்தில் மாமிசத்துக்காக மாடுகள் அதிக அளவில் வெட்ட்ப்படுகின்றன. ஆகவே மாட்டுக்கறியை இம்மாநிலத்தில் தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால் கோவா முதல்வரின் உடல்நிலை உடனடியாக நலம் பெறும். இதை நான் ஏற்கனவே கடந்த வருடம் தெரிவித்துள்ளேன்” என கூறி உள்ளார்.

ஏற்கனவே மாட்டுக்கறி தடை குறித்து போரட்டம் நடந்த போது முதல்வர் மனோகர் பாரிக்கர் “மாட்டுக்கறி ஏற்றுமதி மாநிலத்துக்கு நல்ல வருவாய் அளிக்கிறது. அதை யாராவ்து தடுக்க நினைத்தால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை அளிபேன் என தெரிவித்துள்ளார்.

சாமி சக்ரபாணி மகராஜ் சென்ற வருடம் கோவா மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்ட் போது மாட்டுக்கறியை கேரள மக்கள் அதிகம் உண்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறியது கடும் சர்ச்சையை கிளப்பியது.