ராகுல் கருத்தை மத்திய அரசு ஏற்றால் பேரறிவாளன் விடுவிப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ராகுல் கருத்தை மத்திய அரசு ஏற்றால் பேரறிவாளன் விடுவிப்பு நடக்கும் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தமிழ்த்திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை, சந்தித்தார். அப்போது, “ராஜீவ்காந்தி கொலைக்க குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தங்கள் குடும்பத்துக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை” என்று ராகுல் தெரிவித்ததாக தகவல் பரவியது.

இது குறித்து பா.ரஞ்சித்திடம் கேட்டபோது, அவரும் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள கட்டாலங்குடிக்கு தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ வருகபுரிந்தார். அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு கடம்பூர் ராஜு, “பேரறிவாளனை விடுவிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் தமிழக அரசு செய்துள்ளது. அவர் விடுவிக்கப்படுவதில் அரசுக்கு எந்தவித எதிர்மறைக் கருத்தும் இல்லை.

ராகுல்காந்தி கருத்தை  மத்திய அரசு ஏற்றால், பேரறிவாளன் விடுவிக்கப்படுவது நடக்கும்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

You may have missed