அதிக கட்டணம் வசூலித்தால், திரையரங்க உரிமம் ரத்து செய்யப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

சென்னை:

தியேட்டர்களில் தீபாவளியை யொட்டி, அதிக கட்டணம் வசூலித்தால், திரையரங்க உரிமம் ரத்து செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே தியேட்டர்களில் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்றெல்லாம் காரணம் சொல்லி அதிக கட்டணம் வசூலித்தால், திரையரங்க உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ,  தமிழகம் முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சைகள் கொடுக்க அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசக்கு ஆலோசனை சொல்லலாமே தவிர,   மக்களை அச்சுறுத்தும் விதமாகப் பேசி, பீதியைக் கிளப்பக் கூடாது என்றவர்,   அரசியலின் அரிச்சுவடியே தெரியாமல், அரசியலுக்குள் நுழைந்து மாட்டிக்கொண்டுவிட்டார் கமலஹாசன் என்றும் கூறினார்.

மேலும்,  இந்த தீபாவளித் திருநாளுக்கு தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றவர்,  பெரிய பட்ஜெட் படம், ஸ்டார் வேல்யூ உள்ள படம் என்றெல்லாம் சொல்லி, அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றால், அந்த தியேட்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  சர்கார் படம் வெளியாகும் போது திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித் தால், திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,   சிறப்பு குழு அமைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறா என்பதை கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.