டில்லி

ரும் 2019 ஆம் வருடம் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரஃபேல் ஒப்பந்தத்தம் குறித்து கிரிமினல் விசாரணை நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கூறுவதும் இதை பாஜக மறுப்பதும் தொடர்கிறது. உச்சநீதிமன்றம் இதில் முறைகேடு எதுவும் இல்லை என தீர்ப்பளித்தது. ஆயினும் காங்கிரஸ் கூட்டு பாராளுமன்றக் குழுவின் விசாரணை தேவை என கோரிக்கை விடுத்தது. அதை பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. ஃப்எதிர்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் கூட்டு பாராளுமன்றக் குழு விசாரணை தேவை என கூறி உள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் வெளியே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி வரும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கிரிமினல் விசாரணை நடத்தப்படுவது உறுதி ஆகும். அந்த விசாரணை மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு சட்ட பூர்வமான தண்டனை அளிக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த ஒரு பதிலும் அளிப்பதில்லை. பிரதமர் சார்பாக அவர் பதில் அளிக்க வேண்டும் என நாங்களும் மற்ற எதிர்க்கட்சிகளும் விரும்புகிறோம். ஆனால் அவர் பதில் அளிப்படு கிடையாது. இந்த ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை ஏதும் எதிர்ப்பு அல்லது கருத்து தெரிவித்துள்ள்ளதா என நாங்கள் தொடர்ந்து கேட்டும்பதில் இல்லை.

பிரதமர் மோடி நாங்கள் கேள்வி கேட்கும் போது பதில் அளிப்பதற்கு பதில் அங்கிருந்து ஓடி விடுகிறார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எங்களை திட்டுவதை நிறுத்தி விட்டு எங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் எங்களை திட்டுவதிலும் கேலி செய்வதிலுமே குறியாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.