சென்னை:

மிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை தொடங்கும் வகையில் தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி

ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்படும் 

அனில் அம்பானிக்காக ரஃபேல் ஒப்பந்தம் மாற்றம்

மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும்

‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய ராகுல், வட இந்தியாவைவிட தென்னிந்திய பெண்கைள மதிக்கிறது என்றும், குறிப்பாக  பெண்கள் விஷயத்தில்,  தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. தமிழகத்தை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து.. பணமதிப்பிழப்பு குறித்த மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல், இதுகுறித்து மோடி உங்களிடம் வந்து யோசனை கேட்டிருந்தால்… அதை நடைமுறைப்படுத்த வேண்டுமா என யோசித்திருப்பார்… அந்த செயல்  தவறானது என்பது அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் அவரோ எல்லாம் தனக்கு தெரியும் என்ற நோக்கில், யாரிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

ரஃபேல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல்,  அனில் அம்பானிக்காக மோடி ரஃபேல் ஒப்பந்தத்தையே  மாற்றி இருக்கிறார். அனில் அம்பானி நிறுவனம்  விமானம் தயாரித்ததே கிடையாது அப்படியிருக்கும்போது, அனில் அம்பானிக்காக ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த விவகாரத்தில் மோடியையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நமது நாட்டில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி குறித்த குறித்த கேள்விக்கு  பதில் அளித்த ராகுல்,  மோடி. நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர வேண்டும்.  நீரவ் மோடியிடம் விசாரிக்க வேண்டும் என்றார்.

அதுபோல, மல்லையாவையும்  இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்றவர்,  நாம் எல்லோரையும் விசாரிக்கலாம். நீரவ் மோடியையும் விசாரிக்கலாம், ராபர்ட் வத்ராவையும் விசாரிக்கலாம் என்று கூறினார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறுதொழில்கள் அழிந்து வருகின்றதே என்ற கேள்விக்கு,  ஜிஎஸ்டி யால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வரும். சிக்கலான ஜிஎஸ்டிக்கு பதிலாக எளிமையான ஒரே வரியைக் கொண்டு வருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும்.

பிரதமர் மோடி முதல், தற்போதைய ரஃபேல் ஊழல் வரை அனைத்து  விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி உரையாற்றினார்.