சென்னை,

தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் களமிறங்கினார். எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை என்ற தனி அமைப்பையும் தொடங்கினார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடைப்பெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் புதுக்கட்சித் தொடங்கப்போவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

இதையடுத்து தீபா பேரவையில் தீவிரமாக செயல்பட்ட திருச்சி சவுந்திரராஜன் பேரவையை கலைக்க முடிவுசெய்திருப்பதாகவும் நாளை திருச்சியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

தீபாவுடன் இணைந்து செயல்பட முடியாமல் அவரது கணவர் மாதவன் விலகி நிற்பது தீபா ஆதரவாளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தீபா பேரவையை கலைக்கும் நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.