என்னை நீக்கினால்…. சபாநாயகரின் கை இருக்காது: பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மிரட்டிய டிடிவி ஆதரவு எம்எல்ஏ….

--

சிவகங்கை:

ன்னை தகுதி நீக்கம் செய்து  கையெழுத்திட்டால்…. சபாநாயகரின் கை இருக்காது என்று பொதுக்கூட்ட மேடையிலேயே, சபாநாயகர் தனபாலுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் டிடிவி ஆதரவு எம்எல்ஏ அறந்தாங்கி ரத்தினசபாபதி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான சபாநாயகர் பதவியில் உள்ள ஒருவரை பகிரங்கமாக மிரட்டிய செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆனால், அதை கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறையினரையும், எடப்பாடி அரசையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய டிடிவி ஆதரவு எம்எல்ஏவான அறந்தா ரத்தின சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ஆளுங்கட்சி மற்றும் அதிகாரங்களுடன் இருப்பவர்களுடன் இருந்தால்தான் தமது தொகுதிக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறியவர்,  ஆனால் துரோகம் செய்பவர்களுடன் இருக்க முடியாது எனவும் கூறினார்.

மேலும்,  இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலம் என்று தமிழக அரசின் மீது குற்றம் சாட்டியவர், 18எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கையெழுத்து போட்ட சபாநாயகர், என்மீது நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி விடுத்தார்.

சபாநாயகர் தனபால் தன்னை நீக்கி  கையெழுத்து போட்டால், அதுதான் அவரின் கடைசி கையெழுத்து என்று மிரட்டியவர், அதுக்கப்புறம் கையெழுத்துப்போட உங்களுக்கு கை இருக்காது என்று பொது மேடையிலேய பகிரங்கமாக மிரட்டி பேசினார்.

இதை கேட்ட அவரது கட்சி தலைவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்த நிலையில், பொதுமக்களோ கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகினர்.

எம்எல்ஏ ஒருவரே பொதுமேடையில் ஒருவரின் கையை வெட்டுவேன் என்று பேசுகிறார்.. ஆனால், அதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனரே என்று முனுமுனுத்தனர்.

இவர்களை போன்றவர்கள், எம்எல்ஏவாக இருந்த என்ன பயன் என்றும், இவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

You may have missed