தமிழக அரசு பாட்டத்திட்டத்தில் கருணாநிதி: திமுக கோரினால் பரிசீலனை! மா.பா.பாண்டியராஜன்

சென்னை:

ருணாநிதியின் படைப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுவதற்கு அதிமுக அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்றும், திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்தார்.

பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பில் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  “வீரத்தாய் குயிலி”என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அப்போது,இந்தி பிரச்சார சபா வாயிலாக இந்தி மொழியை வளர்த்தது போல், தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தமிழ் வளர் மையம் என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கு மத்திய அரசு தங்களோடு சேர்ந்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க அரசு பரிசீலனை செய்யும் என்றும், அதே நேரத்தில் கருணாநிதி படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் அரசு தடையாக இருக்காது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.