ரஜினியின் உழைப்பைப் பார்த்தால் அந்த கடவுளே கை தட்டுவார்! :  விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

ஜினியின் உழைப்பைப் பார்த்தால் அந்த கடவுளே கை தட்டுவார் என்று நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம்  பேட்ட.  இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும், சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, நவாஜுதீன், சித்திக் உள்ளிட்ட பிரபல  நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.  இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடைபெற்றது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியகி ரசிகர்களின் பேராதரவை பெற்றன. மேலும், மரண மாஸ் என்ற பாடல் கடந்த 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிடப்பட்டது.  அனிருத், எஸ்பிபி ஆகியோர் இணைந்து பாடிய இந்தப் பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக உல்லல்லா  என்ற பாடலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பேட்ட திரைப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

பேட்ட படத்தல் ரஜினி, விஜய்சேதுபத, த்ரிஷா

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இது குறித்து விழா மேடையில் பேசிய விஜய் சேதுபதி “நான் காணாத கனவு ஒன்று நிஜமாகியுள்ளது. நான் இவ்வளவு பெரிய மனிதரான ரஜினியுடன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரஜினியின் உழைப்பைப் பார்த்தால் அந்த கடவுளே கை தட்டுவார். சமீபத்தில் திரைத் துறைக்குள் நுழைந்த எனக்கே  அவ்வபோது மெத்தனம் ஏற்படுவது உண்டு. ஆனால் ரஜினி ஒவ்வொரு காட்சியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு நடிக்கிறார்.

தான். கேமரா முன் நிற்கவில்லை கோடிக்கணக்கான ரசிகர்களின்  முன் நிற்கிறோம் என்கிற உணர்வோடு பொறுப்போடு ரஜினிகாந்த் செயல்படுவார். நானும் அந்த நிலைக்கு வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று விஜய் சேதுபதி பேசினார்.