சென்னை,

திமுக அம்மா அணியில் தற்போது உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை எடப்பாடி தலைமயில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால், முதல்வர் எடப்பாடியின் பதவி பறி போய்விடும் என்று கூறினார்.

அப்போது எடப்பாடி அணியினர் தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று கூறினார். மேலும், எடப்பாடி அணியினர்  கட்சியின்  சட்ட திட்ட விதிகள் தவறாக திரித்து குறிப்பிடுகிறார்கள் என்று கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளராக  சசிகலா நியமனம் சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்று எடப்பாடி அணியினர் ஒத்துக்கொண்டுள்ள நிலையில், சசிகலா நியமனம் செய்த அனைத்து பொறுப்புகளும் செல்லும் என்றும் கூறினார்.

அதன்படிதான் ஓபிஎஸ்-ஐ கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார் என்றும், அவர்மூலம் தான் தற்போது கட்சியின்  பேங்க்  அக்கவுண்ட் ஆபரேட் செய்ய முடிகிறது என்றும் கூறினார்.

ஒபிஎஸ்-ஐ நீக்கியது செல்லுபடியாகும்போது, நான் நிர்வாகிகள் நியமனம் செய்வது எப்படி செல்லுபடியாகாது என்று கேள்வி எழுப்பிய தினகரன்,

அர்.கே.நகர் தொகுதி தேர்தலின்போது, அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில்,  நான் கொடுத்த கடிதம காரணமாகத்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் தொப்பி சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது என்று கூறினார்.

மேலும், எடப்பாடி அணியினர், கட்சியின் சட்ட விதிகளை மீறி நடவடிக்கை எடுத்துள்ளனர். நான் தேர்தல் ஆணையதிதில்  புகார் அளித்தால் முதல்வர் பதவி இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

கட்சி விதிப்படி, தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள், பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள். அதுபோல துணைப்பொதுச்செயலாளர் பதவி , பொருளாளர் பதவி போன்றவை நியமனம் செய்யப்படும் பதவிகள் என்றார்.

நியமன பதவிகளை நியமனம்  செய்ய அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அதுபோலவே நாஞ்சில் சம்பத்துக்கும் பதவி வழங்கப்பட்டது.

அதே  அதிகாரம் துணைப்பொதுச் செயலாளருக்கும் உண்டு என்று கூறிய டிடிவி தினகரன்,  கட்சியின் சரியாக செயல்படாதவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், புதிய நிர்வாகிகள் நியமிக்கவும், பொதுச்செயலாளர் சார்பாக துணைபொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.