டில்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுவரை 292 விக்கெட்டுகளையும் (சராசரி 25.26), ஒருநாள் போட்டிகளில் 150 வி க்கெட்களையும் (சராசரி 32.91) வீழ்த்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் அடுத்து நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அஸ்வின் இடம்பெறவில்லை. இந்நிலையில் அஸ்வின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடி க்கும். இந்திய அணிக்காக விளையாடுவது எனக்கு கவுரவத்தை அளிக்கிறது. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் நான் இடம்பெறாதது நீக்கமா? அல்லது ஓய்வா? என்பது தெரியவில்லை. இதில் கருத்து தெரிவிக்கும் இடத்தில் நான் இல்லை. அணி விவகாரங்களில் தலையிட எனக்கு அதிகாரம் கிடையாது.

அனைத்து போட்டியிலும் முன்னேறுவதே எனது குறிக்கோள். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். இதுவரை இல்லாத வகையில் கூடுதல் கவனம் செலுத்துவேன். இதை அதை மட்டும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும். அணி விவகாரங்களில் எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹெராத் எனக்கு சிறந்த முன்மாதிரி. வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியவர். ஒவ்வொரு நாளும் அவர் தனது திறமையை மேம்படுத்தி வருகிறார். தான் ஒரு சாம்பியன் என்பதை தனது ஆட்டத்தின் மூலம் அவர் நிரூபித்துள்ளார். தடைகளை கடந்து சாதனை படைக்கம் திறன் மிக்கவர்.

அனில் கும்ப்ளேவின் தீவிர ரசிகன் நான். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அவர் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 619 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நான் 618 விக்கெட்டுகளை மட் டுமே கைப்பற்ற நினைக்கிறேன். இந்த இலக்கை அடையும் போட்டியுடன் நான் ஓய்வு பெற்றுவிடுவேன். இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும்’’ என்றார்.