ன்னாவ்

ன்னாவ் பெண்ணின் தந்தை தம்மிடம் பணம் இருந்திருந்தால் தன் மகள் இறந்திருக்க மாட்டார் என உ பி சபாநாயகரிடம் கூறி உள்ளார்.

உன்னாவ் தொகுதி ச்ட்டப்பேரவை உறுப்பினர்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறை, பலாத்காரம் போன்ற குற்றங்கள் பெருகி வருகிறது.   அதே வேளையில் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் அநேகமாக ஏழ்மை நிலையில் உள்ளனர்.  அதனால் அவர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை என அம்மாநில மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

கடந்த வருடம் உன்னாவ்  பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஐவரால் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.   அவருடைய புகாரை ஏற்றுக் கொள்ளவே அவர் கடும் போராட்டம் நடத்த நேர்ந்தது.   இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர் ஜாமீனில் வெளி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன் தினம் காலை அந்தப் பெண் ரேபரேலி நீதிமன்றத்துக்கு சென்றுக் கொண்டிருந்த போது அவரை ஜாமீனில் வெளி வந்த இருவரும் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்திச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு ஓடி விட்டன.  அந்த பெண்  டில்லி மருத்துவமனையில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

ஐதராபாத்தில் நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார்.   அந்த குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் என்கவுண்டர் செய்து அந்த குற்றவாளிகளைக் கொன்றனர்  இது குறித்து உன்னாவ் பெண்ணின் தந்தை தனது மகளைக் கொன்றவர்களையும் எனகவுண்டர் செய்வதைத் தாம் காண வேண்டும் எஅன் தெரிவித்துள்ளார்.

உன்னாவ் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் சபாநாயகருமான இருதய நாராயண தீட்சித் இடம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, “என்னிடம் பணம் இருந்தால் அதை நான் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரிடம் வீசி எறிந்து என் மகளைக் காப்பாற்றி இருப்பேன்.   என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்” என தெரிவித்துக் கதறி உள்ளார்.   இது பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.