நான் அமைதியாக இருந்தால் தான் சான்ஸ் என்றால் எனக்கு சினிமாவே வேண்டாம்: நடிகர் சித்தார்த் சீற்றம்

சென்னை: நான் அமைதியாக இருந்தால் தான் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்றால் எனக்கு அந்த தொழிலே தேவையில்லை என்று இளம்நடிகர் சித்தார்த் அதிரடியாக கூறி இருக்கிறார்.

ஒரு சிறுவனாக, கல்லூரி மாணவனாக சினிமாவில் தோன்றி அறிமுகமாகிய இளம் நடிகர் சித்தார்த், நாட்டு நடப்புகளை பற்றி அதிரடியாக தமது கருத்துகளை பதிவிடுபவர். எந்த கருத்தையும் நேரிடையாக நெற்றி பொட்டில் அடித்தாற்போல் பேசும் நபர்.

சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அழகானவை… அதே நேரத்தில் வீரியமானவை. அடுத்து அவர் நடித்து வெளியாக இருக்கும் தக்கார் படமும் அதே வித்தியாசமான வீரியத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இனி அவரது பேட்டியை பார்க்கலாம்..!

கே: சிவப்பு, மஞ்சள், பச்சை, அருவம்.. இப்போது தக்கார். இந்த படத்திலும் ஒரு ஆக்ஷன் ஹீரோ. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டதா?

ப: உலக பார்வைக்கு ஏற்ப, தரத்துக்கு இணையாக நான் ஒரு படம் தருகிறேன் என்றால் மக்களை நான் அந்நியப்படுத்துகிறேன் என்று அர்த்தம். நானே ஒரு ரசிகனாக இருந்து எனக்கு ஏற்ற படங்களை தேர்ந்தெடுக்கிறேன். அடுத்த 5,10 ஆண்டுகளில் நான் செய்ய வேண்டிய ஸ்கிரிப்டுகள் உள்ளன. கூடுதலாக ரசிகர்களை, பார்வையாளர்களை பெற குறிப்பிட்ட கதாபாத்திரத்தை கையாள வேண்டும். அதற்கு கமல்ஹாசனை சொல்லலாம். ஒரு சமநிலையை அடைய அவர் நிறைய செய்ய வேண்டி இருந்தது, நடிப்பது என்பதை விட வியாபாரத்திலும் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட முதலீட்டை படத்தில் போட்டால் அது வருமானமாக திரும்ப வரவேண்டும். அதனால் தான் ஒரு முக்கியமான காட்சியில் நான் ஒரு 50 பேரை அடித்து சாய்த்துவிட்டால், அவர்கள் இறந்துவிட்டால்… அந்த வகையான சினிமாவை நான் விரும்பவில்லை. எனது கதாபாத்திரம் என்ன செய்கிறது என்று மக்கள் கைதட்ட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அதனால் இப்போதுள்ள வணிக சினிமாவை ஏற்பதற்கு நீண்ட காலம் ஆனது.

கே: தக்கார் படம் செய்ய வேண்டும் என்று எது உங்களை உந்தி தள்ளியது?

ப: கார்த்திக் என்ன செய்ய விரும்புகிறார் என்ற பார்வை காரணமாக தக்கர் என்னைக் கவர்ந்தார். அவரது ஸ்கிரிப்டைப் பற்றிய சில விஷயங்களை நான் விரும்பினேன், அதனுடன் அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று  சொன்னபோது, ​​நான் முன்பு காட்டப்படாத ஒரு கதாபாத்திரத்தில் என்னை காண்பிக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே பட விஷயத்தைப் பற்றி நான் பேசவில்லை. மேலும், 2 ஸ்கிரிப்ட்கள், 2 மனிதர்கள், அவர்கள் ஏன் ஒன்றாக வருகிறார்கள் என்பதற்கான சுவாரஸ்யமான பார்வைகள் உண்டு..  அவற்றில் ஒருவர் தான் தக்கர். நம்பமுடியாத வித்தியாசமான இரண்டு நபர்களைப் பற்றியது. இந்த படத்தில் காட்டப்படும் உறவு ஏன் நடக்கிறது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இது ஒரு இளம், முற்போக்கான கதாபாத்திரம். இந்த படத்திற்குப் பிறகு, நான் ஒரு அதிரடி ஹீரோவாக கருதப்படுவேன் என்று நம்புகிறேன்.

கே: உங்களது பேட்டிகள், சமூக வலைதளங்களில் நீங்கள் வெளியிடும் கருத்துகள்,அமைதியாக இருக்க வேண்டும், மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் இல்லாத நபராக காணப்படுகிறீர்கள். அது ஏன்?

ப: நீங்கள் என்னை கல்லூரியில் சந்திருந்தால் நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். சில மாதங்களாக உங்கள் ரத்தத்தை கொதிக்க வைக்கும் செயல்கள் இந்தியாவில் நடக்கிறது. நீங்கள் வளர்ந்த இந்த இந்தியாவில் இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் நம்ப முடியாது. எனவே இந்தியாவுக்கு நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

கே: உங்களின் இந்த அணுகுமுறை, உங்களின் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா?

ப: அமைதியாக இருந்தால் தான் எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்றால் எனக்கு அந்த வேலை தேவையே இல்லை. நான் அதிகம் பேசும் நபர் என்று அழைக்கப்படுவதை பற்றி எனக்கு கவலையில்லை. பேசவில்லை என்றால் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். நாட்டில் பெரும்பான்மையோர் அமைதியாக இருப்பது போன்று என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆண்டவனும், இந்த நாடும் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. பலவற்றை அனுபவித்த, சலுகைகள் பெற்ற ஒருவர் பேசவில்லை என்றால் இந்த நாடு என்னாவது? இது எனது தனிப்பட்ட விருப்பம். மற்றவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நான் பாடம் எடுக்க வேண்டியது இல்லை. இப்போது வரை எனது தொழிலில் எந்த இடைஞ்சலும் இல்லை. நன்றாக தான் போய் கொண்டிருக்கிறது. இதுவே நிலைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் திரைத்துறையில் யாராவது எனது வாயை அடக்கு, பேசாதே என்றால் அதை பற்றி பொருட்படுத்த மாட்டேன். ஓட்டு போடுகிற, வரிகட்டுகிற ஒரு சாதாரண பிரஜை. எனது மாநிலத்தில், எனது நாட்டில் என்ன நடக்குது என்பதை பற்றி கவலைப்பட்டாக வேண்டும். அதனால் தான் இதுவரை எந்த கலைஞரும், என்னை வாய்மூடி இருக்குமாறு கூறவில்லை.

கே: அரசியலில் ஈடுபடுவது பற்றி?

ப: அரசியல்வாதியாக இருக்க எனக்கு எந்த விருப்பமும் இல்லை. என்னைப் போல பேசும் மக்கள் அரசியலில் இருக்க முடியாது. அதற்கு நீங்கள் அதிக ராஜ தந்திரத்துடன் இருக்க வேண்டும், சரியான நேரத்தில் சரியானதை எப்படிச் சொல்வது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.. நான் பேசவில்லை என்றால், குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இந்த கட்டத்தில், நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது மிகவும் முக்கியம். இது வெரம் கருத்து பதிவு தான், வேறு எதுவும் கிடையாது.

கே: உங்களின் சிவப்பு, மஞ்சள், பச்சை படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது, அந்த தருணத்தில் எப்படி இருந்தீர்கள்?

ப: நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அது எந்த தனிநபரின் தவறும் அல்ல. ஆனால் தமிழ் சினிமாவும், வியாபாரமும் மிகவும் தந்திரமாக இருக்கின்றன. ஸ்கிரிப்டில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு என்பது ஆரோக்கியமானது அல்ல. எந்த படம் முதலில் ரிலிசாகிறது, எந்த படம் தியேட்டருக்கு போகிறது. முன்பு சாட்டிலைட் சந்தை இருந்தது. இப்போது அது சுத்த மோசமாகிவிட்டது. ஒரு தயாரிப்புக்கு 1000 ரூபாய் போடு, அதை விளம்பரப்படுத்த 500 ரூபாய் செலவழி என்பது தான் இப்போது இருக்கிறது. அப்படி வரும் படங்கள் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்து ஏமாந்த படங்கள் நிறைய உள்ளது. வெற்றிக்கு என்ன தேவை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்து வைத்துள்ளனர். நான் வெள்ளிக்கிழமை ஹீரோ. ஆகவே இந்த முடிவு எனக்கு ரொம்ப முக்கியம்.

கே: உங்கள் ரசிகர்கள் பட்டாளத்தின் மூலம் பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று நினைத்து இருக்கிறீர்களா?

ப: எனது படங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்று நான் நிச்சயமாக விரும்புகிறேன், அவர்கள் என்னிடமிருந்து ஏதாவது எதிர்பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் ஏதாவது செய்கிறார் என்றால், தைரியமா போய் பக்காலம். எனக்கு படங்கள் புக் ஆகவில்லை. நான் அதிகம் எதிர்பார்ப்பதால் படம் இல்லாத நிலை உருவானால் எனது மார்க்கெட்டை உயர்த்துவது பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் அது நடக்காது. இப்போது யுடியூபில் 2 விதமான ரசிகர்கள் இருக்கிறார்கள். யாருக்கு அதிக லைக் கிடைக்கிறதோ என்று பார்க்கிறார்கள். அரை மணி நேரத்தில் எத்தனை விருப்பங்கள், எத்தனை மணிநேரங்களுக்கு ஹேஸ்டேக் போக்கு இருந்தது, இதை நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் செய்ய விரும்பவில்லை. நான் இதை ஏற்கவில்லை. அது ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. யார் இதைச் செய்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியாது. போட்டிக்காக அவர்கள் உருவாக்கும் அவமரியாதை ஹேஷ் டேக்குகளை பார்க்கிறேன். நான் அந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன். நான் பண்ணினேன் என்பதற்காக வேண்டாம், அதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள், அடுத்ததை தேடுங்கள் என்றால் நான் நம்புகிறேன். தெலுங்கில் நான் அறிமுகமான போது, ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்றேன். கமல் விசிறி என்பதால் அந்த பார்வையிலே பார்க்கிறேன். முதல் நாள் முதல் காட்சி அந்த கிக்கே வேற. நானும் அந்த பந்தயத்தில் இருக்கேன் என்று வைத்தீர்கள் என்றால் என்னை கணிக்காதீர்கள், நான் என் வழியில் செல்கிறேன்.