டில்லி:

பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவன நிகழ்ச்சியில் பேசிய ஆன்மிக குரு பாபா ராம்தேவ், நான் நினைத்தால் இப்போதுகூட பிரதமர் ஆக முடியும் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யோகா குரு பாபா ராம்­தேவ், பதஞ்­சலி என்ற பெய­ரில், மூலிகை, ஆயுர்­வேத உண­வுப் பொருட்­களை விற்­பனை செய்து வரு­கி­றார். இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறைந்த காலகட்டத்தில் பிரபலமாகி உள்ள இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.

அதில் பேசிய பாபா ராம்தேவ்,  நான் நடத்தும் நிறுவனத்தில் இருந்து எப்போதும் எனக்கு வருமானம் எதிர்பார்த்தது கிடையாது என்றும், இதை பொது நல நோக்கத்தோடு மட்டுமே செய்கிறேன். நான் இப்படியே மக்களுக்கு சேவை செய்யவும், பதஞ்சலி மூலம் பொருட்கள் விற்கவும் விரும்புகிறேன் என்றும் கூறினார்.

மேலும், நான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும். பாரதியஜனதா கட்சியில் எனக்கு அதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை. அரசியலில் ஈடுபட நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது என்றும், அப்படி நினைத்திருந்தால்,  கட்சி அலுவலகம் திறந்து முதலமைச்சராகவோ, எம்.பியாகவோ, பிரதமராகவோ ஆகியிருக்க முடியும் என்றும் கூறினார்.

பாபா ராம்தேவின் பிரதமர் ஆவே என்ற  பேச்சு சர்ச்சையை உருவாக்கி உள்ளது.