என்னை பதவி நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரியும் : டிரம்ப்

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் தம்மை பதவி நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து விடும் என கூறி உள்ளார்.

தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது இரு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துளனர்.    கடந்த 2016 ஆம் வருட அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த குற்றச்சாட்டை அவர்கள் தெரிவிக்காமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அத்துடன் இவ்வாறு லஞ்சம் அளித்த குற்றத்துக்காக அவருடைய முன்னாள் வழக்கறிஞருக்கு சிறை தண்டனை வழங்கபட்டுள்ளது.   இது குறித்து நாடெங்கும் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.

ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், “உங்கள் மீது இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு, லஞ்சம் அளித்த குற்றச்சாட்டு ஆகியவை உள்ளன.   இதனால் உங்கள் மீது பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்படவும் வாய்ப்பு உள்ளது .  அவ்வாறு வந்தால் என்ன ஆகும்?” என கேட்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு பதிலாக, “நான் ஏராளமான வேலை வாய்ப்பை எனது ஆட்சியில் உருவாக்கி இருக்கிறேன்.  அமெரிக்க பொருளாதாரத்தை மிகவும் முன்னேற்றி உள்ளேன்.  அப்படிப்பட்ட என் மீது எவ்வாறு பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முடியும்? நான் பதவி நீக்கப்பட்டா அமெரிக்க பொருளாதாரம் முழுமையாக சரிந்து விடும்.  மக்கள் எல்லோரும் ஏழை ஆவார்கள்” என தெரிவித்துள்ளார்.