வாஷிங்டன்

மக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் கண்டன தீர்மானம் கொண்டு வந்தால் தாம் அடுத்த முறையும் அதிபராவேன் என டிரம்ப் கூறி உள்ளார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி கண்டனத் தீர்மானம் கொண்டு வர உள்ளது.   கடந்த 2016 ஆம் வருட அதிபர் தேர்தலில் ரஷ்ய நாட்டின் தலையீடு இருந்ததால் தான் டிரம்ப் வெற்றி பெற்றதாக முல்லர் அறிக்கை தெரிவிக்கிறது.   மேலும் அமெரிக்க வர்த்தகம் டிரம்பின் அதிரடி முடிவால்  பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் குடியரசுக் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இந்த கண்டன தீர்மானம் வெற்றி பெற்றால் அதிபருக்கு நாடாளுமன்றம் பதவி நீக்க தண்டனை அளிக்க முடியும்.  இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், “நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் நான் வெற்றி அடைந்து அதிபர் ஆவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.  நான் சென்ற முறை நடந்த அதிபர் தேர்தலில் எவ்வித முறைகேடும் செய்யவில்லை என்பதை பலரும் அறிவார்கள்.

அப்படி இருக்க என் மீது கண்டன தீர்மானத்தை குடியரசுக் கட்சி அளித்தால் அது நியாயமற்றது என்பதை அனைவரும் அறிவார்கள்.  அதில் நான் தண்டிக்கபட்டால் என் மீது மக்களின் இரக்கம் அதிகரிக்கும்.  அதனால் நான் மீண்டும் மிக எளிதாக அதிபராவேன் என நம்புகிறேன்.    நான் என்றுமே தோல்வியை விரும்பியதில்லை.  இந்த தண்டனை எனது வெற்றியை மேலும் எளிதாக்கும்” என தெரிவித்துள்ளார்.