ஜி.கே. வாசனை கோர்த்துவிடும் தினகரன்

--

சென்னை:

தன்னை சந்தித்ததால் சரத்குமார் வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர், ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த ஜி.கே.வாசன் வீட்டில் சோதனை நடத்துவார்களா என்று தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சர் விஜயபார்ஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் இன்று வருமானவரி சோதனை நடந்தது.

இது குறித்து டி.டி.வி. தினகரன் தெரிவித்ததாவது:
“வருமானவரி சோதனையைக் கண்டு அஞ்சமாட்டோம். எந்த சோதனையையும் எதிர்த்து நின்று வெல்வோம்.

கடந்த இரு நாட்களாக ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள். அவர்களது வீடுகளில் எந்தவித சோதனையும் நடத்தவில்லை.
என்னை சந்தித்ததால் சரத்குமார் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள்

வருமானவரித்துறையினர். ஓ.பி.எஸ்ஸை சந்தித்த ஜி.கே.வாசன் வீட்டில் சோதனை நடத்துவார்களா” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.