ஸ்லாமாபாத்

பாகிஸ்தானுக்கு வரும் நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க உரிமை உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

வரும் 21 ஆம் தேதி அன்று அரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.   இதையொட்டி இரு மாநிலங்களிலும்,  காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களும்  அக்கட்சிகளின் கூட்டணித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   பாஜக சார்பில் சமீபத்தில் அரியானா மாநிலத்தில் பிரதமர் மோடி பிரசார கூட்டங்களில் கலந்துக் கொண்டார்.

அப்போது மோடி, “பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்குச் சொந்தமான நதி நீா் பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருக்கிறது.  அந்த நீர் அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமையுள்ளதாகும்.  பாகிஸ்தானுக்கு அந்த நீர் செல்வதை முந்தைய அரசுகள் தடுக்கவில்லை.   நான் விவசாயிகளுக்காகப் போராடி பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரைத் தடுத்து, உங்களிடம் கொண்டு வருவேன்” என்று பேசி உள்ளார்.

இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.   பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது  பைசல் இஸ்லாமாபாத்தில் செய்தியாள்ர்களிடம் “ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி மேற்குப் பகுதி நதிகள்(சிந்து, ஜீலம், ஜைனாப் ஆகிய  மூன்றின்) மீது பாகிஸ்தானுக்குச் சிறப்பு  உரிமை  உள்ளது.

எனவே அந்நதிகளில் பாயும் நீரை இந்தியா திருப்பிவிட முயன்றால் அதனை பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவே கருதுவோம். அதற்கு உரிய பதிலடியும் கொடுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.