கந்துவட்டி: ‘அம்மா’ இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?

நெட்டிசன்:

மாணிக்கம் என்பவரின் முகநூல் பதிவு…

ன்ன சர்ச்சை இருந்தாலும், ஆயிரம் குறைகளை சொன்னாலும் கந்துவட்டி கொடுமையினை #அம்மா அடக்கி வைத்திருந்த விதம் பாராட்டுகுரியது.

தன் வாக்குவங்கி பாதிக்கபடும் எனினும் அவர் மிக #துணிச்சலாக அதனை அடக்கி வைத்திருந்தார்

அதனால்தான் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் கட்டுபடுத்தபட்டிருந்தன‌, #அம்மாவினை நோக்கி சொல்லபடும் மிக ‌ நல்ல விஷயங்களில் நிச்சயம் அதுவும் ஒன்று.

அவர் இல்லாத காலத்தில் அது முளைக்கின்றது, பலி வாங்குகின்றது…

கந்துவட்டிக்கு பிராதான இடம் மதுரையும் அதற்கு தெற்கேயும் உள்ள பகுதிகள். அதுவும் நெல்லை மாவட்டம் மகா மோசம்.

உலகிலே கொடுமையான தொழில் வட்டி.

ஹிட்லர் யூதர்கள் மேல் கொடூரமாக பாய அந்த வட்டிகொடுமைதான் காரணம்….

எந்த தொழிலில் பணம் போட்டாலும் நஷ்டம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது…

ஆனால் வட்டி தொழிலில் அடித்து பிடுங்கிவிடலாம்.
ஒரே முதலீடு #மனசாட்சி இருக்கவே கூடாது..

கடன் என்பது அவ்வளவு பொல்லாத விஷயம்.
அதுவும் நெல்லை பகுதியில் அது மெல்ல கொல்லும் விஷம்..

கடந்த மாதம் வள்ளியூர் பக்கம் 5 லட்சத்திற்கு 15 லட்சம் வட்டிகட்டிவிட்டு இன்னும் கட்டமுடியாமல் ஒரு ஆசிரியர் உயிர்விட்டார்..

இதோ இன்று குடும்பமே தீகுளித்திருக்கின்றது..

அதுவும் அந்த பிஞ்சுகள் கதறும்பொழுது நாமெல்லாம் தமிழர்களா?  வெட்கி தலை குணிகிறோம்.

பிஞ்சுகளை கொன்ற நல்லதங்காள் கதையினை நேரில் பார்த்தது போல் நெஞ்சம் கனக்கின்றது..

இனியும் என்ன மரியாதை!!!

அய்யா பழனிச்சாமி, #அம்மா வழியில் என்ன ஆட்சி நடத்துவீர்களோ தெரியாது. ஆனால் இந்த கந்துவட்டி கொடுமைக்கு மட்டும் அவர் வழியில் முடிவு கட்டுங்கள்.

நிச்சயம் அது நற்பெயரை பெற்று கொடுக்கும்.,

உங்களை கெஞ்சி கேட்கின்றோம் மிஸ்டர் பழனிச்சாமி இன்னொரு உயிர் போகுமுன் விழித்துகொள்ளுங்கள்..

அதற்கு முன் இந்த குடும்பத்திற்கு நியாயம் கொடுங்கள்..

அவர்களும் இம்மாநில அபலைகள். உங்கள் ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என நம்பி முடியாமல் #நெருப்பு பக்கம் சென்றுவிடும் அளவு பாதிக்கபட்டவர்கள்..

அம்மாவின் கனவில் இதனையாவது நிறைவேற்றுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி..

அந்த பிஞ்சுகளின் வேதனைக்காக‌ களமிறங்குங்கள்…

இன்னும் நெஞ்சத்தால் எரியும் எத்தனையோ பாதிக்கபட்ட மக்களுக்காக உருகி வேண்டுகின்றோம்.,.

#இதற்கொரு_முடிவு_கட்டுங்கள்..

#அம்மா ஆன்மா உங்களை #ஆசீர்வதிக்கும்….