லஹன்சி

லிம்பிக் போட்டிகளை நடத்தாமல் ஜப்பான் பின்வாங்க நேர்ந்தால் தாங்கள் நடத்த உள்ளதாக ஃப்ளோரிடா மாநிலத் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.  ஜப்பானில் கொரோனா தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளதால் இந்த விளையாட்டுப் போட்டிகளை மேலும் ஒத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறு தள்ளி வைக்கக் கோரிக்கை விடுப்பதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த அந்நாடு பின்வாங்குவதாக ஊகங்கள் எழுந்துள்ளன.  எனவே இந்த போட்டிகளை வேறு நாட்டில் நடத்தலாம் என சர்வதேச ஒலிம்பிக் குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.   ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யக் குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என்பதால் அந்த ஆலோசனையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான ஃப்ளோரிடா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முன் வந்துள்ளது.  அம்மாநில தலைமை நிதி அதிகாரி ஒலிம்பிக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இருந்து ஜப்பான் பின் வாங்கினால் தமது நாட்டில் அப்போட்டிகளை நடத்தத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து சர்வதேச ஒலும்பிக் குழு தலைவர் தாமஸ் பேக், “ஃப்ளோரிடாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் இடங்கள் தேர்வு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றால் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.   அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால் விரைவில் இது குறித்து ஒலிம்பிக் குழு முடிவு எடுக்கும்.  என்னைப் பொறுத்தவரை ஃப்ளோரிடாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தலாம் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.