வெளிநாட்டு சிகிச்சை அளித்திருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் : தமிழக துணை சபாநாயகர்

புதுக்கோட்டை

வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தல் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி உள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதால் விரைவில் அங்கு இடைத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்க்ப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அதிமுக சார்பில் நடந்த நேற்று ஒரு கூட்டம்  நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தமிழக சட்டப்பேர்வை  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அதனால் தான் அதிமுக தொடர்ந்து இரண்டாம் முறை ஆட்சியைப் பிடித்தது.

அவரை சிங்கப்பூர் லண்டன் அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார். அவர் வழியில் நாமும் நடந்து தற்போது நடைபெற உள்ள அனைத்துத் தொகுதி இடைத் தேர்தல்களிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தற்போது காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். அதனால் நாம் பூத் கமிட்டிகள் அமைத்துள்ளோம். இன்னும் 10 நாளில் ஆட்சி கவிழும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு நிச்சயம் 5 ஆண்டுகள் நிலைத்திருக்கும் ” என கூறினார்.

கார்ட்டூன் கேலரி