ஜெ. உயிரோடு இருந்திருந்தால் பாஜகவால் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச முடியுமா? காங்.எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை: ஜெ உயிரோடு இருந்திருந்தால் பாஜகவால் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச முடியுமா? காங்.எம்.பி. திருநாவுக்கரசர் வேதனை தெரிவித்து உள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இருந்தாலும், இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் தலைமையிலேயே கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில், சமீபகாலமாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, கூட்டணி தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக மூத்த தலைவர்கள பலர் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,  இன்று புதுக்கோட்டையில், நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழாவில் காந்தி பூங்காவிலுள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை  செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சரும், இந்நாள் காங்கிரஸ் கட்சியின்  திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் முதல்வர் வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம் என பாஜக கூறுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை தான் அறிவிக்கும் என்று அக்கட்சியினர் கூறுவது சர்வாதிகாரம் , அராஜகம் என்று கடுமையாக சாடியவர், தன்மானம் உள்ள தலைவர்கள் இதனை ஏற்க மாட்டார்கள் என்றார்.
திருவள்ளுவர் படததுக்கு காசி உடை அணிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, திருவள்ளுவர், சாதி, மதங்களுக்கு அப்பார்ப்பட்டவர். உலகப் பொதுமறையைத் தந்தவர். அவரது படத்துக்கும் சிலைக்கும் காவி வண்ணம் அடிப்பது அநாகரீகமானது.
திமுகவின் கிராம சபைக் கூட்டங்களுக்குத் தடை விதிக்க தமிழக அரசு முயற்சிப்பது தவறு. அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் கிராம சபைக் கூட்டங்களை அதிமுக நடத்தித் தேர்தலைச் சந்திப்பார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.