டில்லி

ரடங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனா பாடிபு 8 லட்சத்தைத் தாண்டி  இருக்கும் எனச் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால் தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இன்று பிரதமர் நடத்திய முதல்வர்கள் கூட்டத்தில் பல மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   பிரதமர் இந்த கோரிக்கையின் அடிப்படையில் இது குறித்து முடிவு எடுக்க உள்ளார்.

இந்நிலையில் சுகாதார அமைச்சக செயலர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம், “இந்தியா ஊரடங்கை அமல் படுத்தாமல் இருந்தால் கொரோனா பாதிப்பு ஏப்ரல் 15 ஆம் தேதி வாக்கில் 8.2 லட்சத்தை எட்டி இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.