லக்னோ:

யோத்தியில் ராமர்கோவில் கட்டுவதாக காங்கிரஸ்  கட்சி தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில், அறிவித்தால், காங்கிரசுக்கு விஎச்பி ஆதரவு அளிக்கும் என விஎச்பி செயல் தலைவர் அலோக் குமார் கூறி உள்ளார்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உ.பி. மாநிலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ராமர்கோவில் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் விஎச்பி., ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்வா அமைப்புகள் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு ராமர்கோவில் கட்ட நிபந்தனைகள் விதித்து வருகின்றன.

இந்த நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ராமர் கோயில் பிரச்னை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்தால் அக்கட்சியை  மக்களவை தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பாக பரிசீலிப்போம் என விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

விஎச்பியின் இந்த புதிய அறிவிப்பு  மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.