மீண்டும் சுரங்கப்பணி தொடங்க வேண்டும் இல்லையேல் ஆதரவு வாபஸ்: கோவா பாஜ அரசுக்கு கூட்டணி கட்சி மிரட்டல்

பனாஜி:

சுரங்க ஊழல் காரணமாக கோவா மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுரங்கப்பணியை,  மீண்டும் தொடங்க வேண்டும் இல்லையேல் ஆதரவு வாபஸ் என்று பாரதிய ஜனதா கூட்டணி கட்சி  மிரட்டல் விடுத்துள்ளது.

ஊழல் வழக்கு காரணமாக கோவாவில் மூடப்பட்டுள்ள சுரங்கங்களை மீண்டும் தொடங்க வேண்டும் அங்குள்ள ஆசாத் மைதானத்தில் சுரங்க பணிகளில் ஈடுபட்டு வந்த சுமார் 3000 தொழிலாளர்கள்  ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதில் கலந்துகொண்ட, கோவா மாநில பாஜ அரசின் கூட்டணி கட்சியான, கோவா பார்வர்டு பார்ட்டி தலைவர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, கோவாவில் மீண்டும் சுரங்கப்பணி தொடங்கப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு அளித்துவரும், ஆதரவை  விலக்கிக்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவா மாநிலத்தில்,  கடந்த 2014-15ம் ஆண்டில் 88 சுரங்கங்களுக்கு அனுமதி புதுப்பித்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில்  வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் கோவா முன்னாள் முதல்வர் லஷ்மிகாந்த் பார்சேகர் ஆதாயம் பெற்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவர்  விசாரணையை சந்தித்து வருகிறார். இதன் காரணமாக சுரங்கங்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பாரிக்கர் தலைமையிலான அரசுதான், ‘சுரங்க அனுமதியை 2வது முறை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  சுரங்க அனுமதிகளை புதுப்பிப்பது மாநில அரசின் கொள்கைப்படி தான்  நடைபெற்றது என்றும், இந்த கொள்கைக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உயர்நீதிமன்ற அறிவுரைப்படி முன்பு மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் தான் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்தாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம்  லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரண நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், சுரங்க பணியாளர்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர், சுரங்க பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கோவா பார்வர்டு பார்ட்டி,  மாநில அரசு  அதிவேக நடவடிக்கைகளை எடுத்து, விரைவில் மாநிலத்தில் சுரங்கத்தை மீண்டும் வேண்டும் என்றும்,  இல்லை என்றால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்திக்கக்கூடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏற்கனவே கோவா முதல்வர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு ஆட்சி ஊசலாடி வருகிறது. பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், முக்கிய கூட்டணி கட்சியான கோவா பார்வர்டு பார்ட்டி மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.