மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு! பாக் பிரதமர் இம்ரான் கான் திடீர் பாசம்

இஸ்லாமாபாத்:

ந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற வாய்ப்பு அமையும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானின் இந்த திடீர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றுவரை மோடியையும், பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்த இம்ரான்கான்,  ”இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் அந்நாட்டின் ஆளுங்கட்சி முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சாடியிருந்தார். ஆனால், தற்போதுமோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத்தில் பன்னாட்டு பத்திரிக்கையாளர்கள் குழுவினருக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது,

இந்தியாவில் இருப்பதை மகிழ்ச்சியாக கருதிய இஸ்லாமியர்கள் தற்போது இந்துத்துவத்தால் கவலையடைந்துள்ளது உள்ளனர்.

இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் குழப்பம் ஏற்படும் என்று கூறி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக வாக்குகள் திரும்பும் சூழல் ஏற்பட்டால், அடுத்த சில வாரங்களில் இந்தியா, பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.

அதேவேளையில் மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற வாய்ப்பு அமையும் என்றும் கூறி உள்ளார்.

இம்ரான்கானின் மோடி மீதான திடீர் பாசம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்புதான்  வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் ஆளுங்கட்சி முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான நிலைப்பாடைக் கொண்டுள்ளது என்றும்,  எல்லாம் அங்கு தேர்தல் வருவதால் தான். இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடக்கவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை மோடி அரசு நிராகரித்துவிட்டது என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் மோடிக்கு ஆதரவாக இம்ரான்கான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.