நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால்….. மருத்துவமனையில் கோபாலை சந்தித்த ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை:

க்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவல்லிக்கேணி மருத்துவமனையில் நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரையும், அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வைகோவையும் ஸ்டாலின் சந்தித்தார்.

ஆளுநர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கைது ஊடகத்துறையினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகினறனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனைக் காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

இதையறிந்த, மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு கோபாலை சந்தித்து விசாரித்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது  கடும் கண்டனத்துக்குரி யது. அவர் மீதான வழக்குகளை ரத்து செய்து உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். கோபாலை விடுவிக்காவிட்டால் இந்த அரசு விபரீதமான விளைவு களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து,  நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டு கைதாகி சென்னை எழும்பூர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வைகோவை சந்தித்து பேசினார்.