குட்கா ஆலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை….கோவை எஸ்பி

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. ஆலைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

அங்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் ‘‘குட்கா ஆலை விவகாரத்தில் சந்தேகம் வந்தால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும்’’ என கோவை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி கூறியுள்ளார்.