வட கொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் பொருளாதார உதவி : அமெரிக்கா

 

வாஷிங்டன்

ட கொரிய நாடு அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் அந்நாட்டுக்கு தேவையான பொருளாதார உதவி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் வரும் ஜூன் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.   இதற்கு முன்னேற்பாடாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ வட கொரிய அதிபரை சந்தித்தார்.  வாஷிங்டன் திரும்பிய அவர் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார்.

அப்போது அவர், “அதிபர் கிம் ஜோங் உடனான பேச்சு வார்த்தை திருப்திகரமாக நடந்தது.   அவரும் அமெரிக்க அதிபரும் நடத்த உள்ள பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.   வட கொரிய அதிபர் அணு ஆயுதங்களை அறவே நீக்கி விட்டால் அதற்காக அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்கி பொருளாதார உதவி அளிக்கப்படும் என நான் உறுதி அளித்தேன்” எனக் கூறினார்.