ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கறுப்புதினம்!: இளைஞர்கள் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து தமிழகத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கங்கே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து தமிழகத்தில் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது.

சென்னை மெரினா கடற்கரை சாலையிலும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

இவர்கள், “கைதான போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்றும், “ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் வரும் குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்போம்” என்றும் தெரிவித்துள்ளனர்.