‘‘கோட்சே இல்லை என்றால் காந்தியை நான் கொன்றிருப்பேன்’’….இந்து நீதிமன்ற நீதிபதி சர்ச்சை பேச்சு

லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் இந்து நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீதிபதியாக பெண் சாமியார் பூஜா சாகுன் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நீதிமன்றம் அதிகாரப்பூர்வமற்றது என்றாலும் பூஜா சாகுன் பாண்டே கூறிய சர்ச்சைக்குறிய கருத்தால் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.

பாண்டே கூறுகையில், ‘‘மகாத்மா காந்தியை கோட்சே கொல்லவில்லை என்றால் அதை நான் செய்திருப்பேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை துண்டாடுவதில் நம்பிக்கை கொண்ட காந்தி தற்போதும் வாழ்ந்தால் கோட்சேயும் இருப்பார். நானும், அகில பாரத இந்து மகாசபாவும் நாதுராம் கோத்சேவை வணங்குகிறோம். கோட்சேவை நினைத்து பெருமை கொள்கிறோம்’’என்றார்.

சில தினங்களுக்கு முன்பு இந்த அமைப்பை சேர்ந்த சுவாமி சக்கரபாணி மகராஜ் கூறுகையில்,‘‘மாட்டு இறைச்சி சாப்பிடுவோர் கேரளா வெள்ள நிவாரணங்களை பெறக் கூடாது’’ என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.