எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜக வெற்றி பெறாது : முன்னாள் பாஜக அமைச்சர்

டில்லி

திர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்தால் பாஜக வெற்றி பெறாது என முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக விளங்கி வருகிறது.   அடுத்த வருடம் பாராளுமன்ரத் தேர்தல் நடைபெற உள்ளது.   இந்நிலையில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “தற்போது தேர்தலில் வெற்றி பெற செய்தி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் மிகவும் அவசியம் என்றாகி விட்டது.    எனவே அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி நடைபெறுகிறது.  இவ்வாறு அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவது கட்சிக்கு நன்மை அளிக்குமே தவிர நாட்டுக்கு நன்மை அளிக்காது.

தற்போதுள்ள நமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமோ என்பது தெரியாது.    அப்படியே கிடைத்தாலும் அவர்கள் வெற்றி பெறுவது மிகவும் சந்தேகமே.   கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 31% வாக்குகள் கிடைத்தன.  எதிரான 69% வாக்குகள் இணைந்தால் பாஜக வால் வெற்றி பெற முடியாது.” என  தெரிவித்துள்ளார்