கட்சி விரும்பினால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் : பிரியங்கா காந்தி

வாரணாசி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப் பிரதேச கிழக்குப் பகுதியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆகவே அவர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக உத்திரப் பிரதேசம் வந்தார். வாரணாசி நகரில் அவர் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அவர் இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவாரா எனவும் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் எனவும் கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு பிரியங்கா காந்தி, “நான் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சி என்னை போட்டியிட வேண்டும் என விரும்பினால் நான் நிச்சயம் போட்டியிடுவேன். எனது விருப்பம் கட்சிக்கு பணி செய்வதாகும்” என் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி