சென்னை,

க்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு  சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது.

இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இந்த உறுதியை  ஐகோர்ட்டில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய  மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை கிராம பகுதிகளில் தமிழக அரசு திறந்து வந்தது.

இதற்கு அந்த பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கில் கிராம சபைகள்  தீர்மானம் நிறைவேற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்து.

இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது,  3 ஆயிரம் கடைகளை மூடி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய உள்ளோம். 3 ஆயிரம் கடைகள் மாற்றப்பட உள்ள நிலையில் 12 வழக்குகளே வந்துள்ளன என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கப்பட மாட்டாது  அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.