ரஜினி, கமல் இணைந்தால்…: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில்

ரஜினி கமல் இணைந்து செயல்பட்டால் புரட்சி ஏற்படாது.. வறட்சிதான் ஏற்படும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக பதில் அளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். அவரது ரசிகர் மன்றம, மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  தேர்தல் நெருக்கத்தில் அரசியல் கட்சியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் துவங்கிவிட்டார். தொடர்ந்து அறிக்கைகள், தலைவர்கள் சந்திப்பு, ஆளும் கட்ச மீது அதிரடி விமர்சனம் என்று பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், சில மாதங்களக்கு முன், |தமிழகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,  ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

இதே கருத்தை நேற்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

“நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் அரசியலில் இணைந்து செயல்பட்டால் புரட்சி ஏற்படும்” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இன்று இது குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு  அவர், “ரஜினி கமல் இணைந்தால் புரட்சி எதுவும் ஏற்படாது. வறட்சிதான் ஏற்படும்” என்று அதிரடியாக கிண்டலடித்து பதில் கூறினார்.