ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருக்கு ஆபத்து! சுப்பிரமணியசாமி மிரட்டல்

தூத்துக்குடி,

மிழகம் வந்துள்ள பாரதியஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி தமிழக அரசியல் குறித்து பேசினார்.

அப்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் ஆபத்து என்று அதிரடியாக கூறினார்.

ஏற்கனவே  தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த சாமி, தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள் என்று அதிரடி கருத்தை கூறிய சாமி,

நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் கூறியிருந்தார்.

பின்னர் ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பின்போது, நாட்டில் ஜனநாயக சிஸ்டம் சரியில்லை. அதை சரிப்படுத்த வேண்டும் என்றும், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், போருக்கு ரெடியாக இருக்கும்படி தனது ரசிகர்களிடம் . அரசியல் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அப்போது, தனியார் டிவி சேனல் ஒன்றிருக்கு பேட்டியளித்த சுப்பிரமணியசாமி,

ரஜினி ஒரு ஊழல் நடிகர் என்றும், அரசியலுக்கு வரக்கூடாது, ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது என்றும், முதல்வராக தகுதியில்லை என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய சாமி,

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சாமி, ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து என்று பகிர் தகவலை கூறி உள்ளார்.