’’பீகாரில் லாலு கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் கிரிமினல்களுக்கு வேலை கிடைக்கும்’’
பீகார் சட்டப்பேரவை தேர்தலை லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் சந்திக்க உள்ளன.
லாலு இப்போது ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதால், அவரது இளையமகன் தேஜஸ்வி யாதவ் ,எதிர்க்கட்சிகள் கூட்டணிக்குத் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
 
’தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை அளிப்போம்’’ என தேஜஸ்வி வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், பீகார் மாநில பா.ஜ,.க.தேர்தல் பொறுப்பாளருமான தேவேந்திர பட்நாவிஸ், பாட்னாவில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
 
அப்போது பட்நாவிஸ், தேஜஸ்வியை  வறுத்தெடுத்து விட்டார்.
 
பட்நாவிஸ் பேச்சின் சுருக்கம் இது:
 
“ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப்போவதாகத் தேஜஸ்வி கூறியுள்ளார். இந்த வேலை யாருக்கு கிடைக்கும்? 10 லட்சம் கிரிமினல்களுக்கு தான் கிடைக்கும்.
 
10 லட்சம் நாட்டுத் துப்பாக்கிகளுக்கு, தேஜஸ்வி ஆர்டர் கொடுப்பார். அந்த ஆயுதங்களைத் தனது ஆதரவாளர்களுக்கு அளிப்பார். அந்த கட்சியின் ஆதரவாளர்கள் யார்?
 
கொள்ளைக்காரர்கள், கடத்தல் காரர்கள், கொலைகாரர்கள் தான், ஆதரவாளர்கள்.
 
பழைய நிலைக்கு பீகார் திரும்பும், மாலை நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. யாரும் புதிதாக கார் வாங்க முடியாது.’’ என்று கொந்தளித்தார், பட்நாவிஸ்.
 
-பா.பாரதி.