இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா, பங்களாதேஷ் நாட்டினரை சுட்டுக் கொல்ல வேண்டும்….பாஜக எம்எல்ஏ

ஐதராபாத்:

இந்தியாவில் இருந்து வெளியேற மறுக்கும் ரோஹிங்கியா, பங்களாதேஷை சேர்ந்தவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய வரைவு பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த மாநில மக்கள் தொகையில் 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டுள்ளது. 40 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.இதேபோல் காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்கள் மரியாதையுடன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லை என்றால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.