சசி என் கண்ணில் மாட்டியிருந்தால்…..! டிஐஜி ரூபா

பெங்களூர்,

சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வரும்போது என் கண்ணில் பட்டிருந்தால் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கும் என்று டிஐஜி ரூபா அதிரடியாக கூறி உள்ளார்.

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, சிறையினுள்ளும், சிறைக்கு வெளியே சென்றும்  உல்லாசமாக  பொழுதை கழித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், ஆக்ரோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சிறையை ஆய்வு செய்த டிஐஜி ரூபா, இதுகுறித்த அதிரடி தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவரிடம் சசிகலா சிறைக்கு வெளியே அடிக்கடி சென்ற வருவதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரூபா,

தான் சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது,  சசிகலா சிறையில் இல்லாமல், சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து நான் பல முறை விசாரித்தேன். மேலதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

டிஐஜி ரூபா

எனவே, நானே களத்தில் இறங்கி, நேரடியாக கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால், நான் முயற்சிப்பது குறித்து யாரோ அவருக்கு தகவல்களை கூறி அலர்ட்டாக்கி விடுகிறார்கள்…

இதன் காரணமாக அவர்   என் கண்ணில் அவர் மாட்ட வில்லை. அப்படி அவர் வெளியில் சென்றதை நான் கண்டுபிடித்திருந்தால்,

நான் எடுக்கும் நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும்.

சசிகலா சிறைக்குள் ஆப்பிள் ஐபோன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவரிடம் சோதனை நடத்தி என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் அவர் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.  அந்த பணிகள் நிற்கவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சிறையில் செல்போனை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது வேலை செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை முறையிட்டும்… உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

சிறையில் பொழுதுபோக்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. சிறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இதுபோன்ற நடக்க வாய்ப்பு இல்லை. எங்களுக்கு இந்த தகவலை தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.