கராய்ச், உத்திரப் பிரதேசம்

ச்சநீதிமன்ற தீர்ப்பு ராமர் கோவில் அமைக்க எதிராக வந்தால் புதிய சட்டம் இயற்றி ராமர் கோவில் கட்டப்படும் ந பாஜக தேசிய செயலர் சுனில் தியோதர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதை தேர்தல் வாக்குறுதியாக அளித்து பாஜக வென்று ஆட்சியை பிடித்தது. ஆயினும் கடந்த 4.5 வருடங்களாக அரசு ஒன்றுமே நடவடிக்கை எடுக்காததால் இந்து அமைப்புக்கள் பாஜக மீது கோபத்தில் உள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்ற அமர்வு நாளை நடைபெற இருந்த அயோத்தி வழக்கு விசாரணையை ரத்து செய்துள்ளது.

இது குறித்து உத்திரப் பிரதேச மாநிலம் பக்ராய்ச்சில் பாஜக தேசிய செயலர் சுனில் தியோதர், “பிரதமர் மோடி ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும் என கூறி உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு வந்த பிறகே சட்டம் இயற்றுவது பற்றி ஆலோசிக்க முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பு கோவில் அமைப்பதற்கு எதிராக இருந்தால் புதிய சட்டம் இயற்றப்படும்.

தீர்ப்பு கோவில் அமைக்க சாதகமக இருந்தால் உடனடியாக கோவில் அமைக்கபடும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது அது குறித்து புதிய சட்டம் இயற்றினால் அந்த சட்டம் செல்லததாகி விடும். எங்கள் வாக்குறுதி, முடிவு மற்றும் ஆர்வம் அனைத்தும் ராமருக்காக அவர் பிறந்த இடத்தில் மாபெரும் கோவில் அமைப்பது தான் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.