நிலைமை சரியாகவில்லையென்றால் அடுத்த ஐபிஎல் தொடரும் அமீரகத்தில்தானா..?

--

மும்பை: இன்னும் 6 மாதகாலத்தில் நடைபெறக்கூடிய 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், இந்தியாவில் நிலைமை சீராகவில்லை என்றால், மீண்டும் அமீரகத்திலேயே நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா – அமீரகம் நாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தவகையில், அமீரகம், பிசிசிஐ அமைப்பின் ஆப்ஷன்-பி என்பதாக தொடர்ந்து இருக்கும்.

இதுதொடர்பான ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா. இவரின் இந்தக் கருத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பொருளாளர் அருண் துமால் ஆகியோரும் வழிமொழிந்துள்ளனர்.

அதாவது, இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் அடுத்தாண்டு ஐபிஎல் காலக்கட்டம் வரை நிலைமை சீராகவில்லை என்றால், 14வது ஐபிஎல் சீசனும் அமீரகத்திலேயே நடத்தப்படும் என்பதே இதன் அர்த்தம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.